தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி
ADDED : 577 days ago
இறைவன், சைரன் படங்களுக்கு பிறகு பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதில், வரப்போகிற மக்களவை தேர்தலில் நமது நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவியின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.