அண்ணா சீரியலிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்
ADDED : 572 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அண்ணா. நேயர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள இந்த தொடர் இதுவரை 200 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது இந்த தொடரில் வெங்கடேசன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சந்தோஷ் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அதேசமயம் அவருக்கு பதிலாக அஜய் பரத் இனி புதிய வெங்கடேசனாக நடிக்க இருக்கிறார்.