மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
533 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
533 days ago
'இளையராஜா', தமிழ் சினிமா மட்டுமல்ல, தென்னிந்திய சினிமா, ஹிந்தி சினிமா என உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களால் ஒவ்வொரு நொடியிலும் கேட்கப்படும் இசையாக இருக்கும். அவரது பயோபிக் படம் 'இளையராஜா' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது முதல் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இளையராஜாவைப் பற்றிய பயோபிக் படத்தை இன்றைய தலைமுறை இயக்குனரான அருண் மாதேஸ்வரன் எப்படி இயக்குவார், இயக்கப் போகிறார் என்ற சந்தேகத்தை பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இளையராஜாவின் இசையை அணுஅணுவாக நேசித்த ஒரு இயக்குனரால் மட்டுமே அவரைப் பற்றிய பயோபிக் படத்தை ரசித்து எடுக்க முடியும் என்கிறார்கள் சிலர்.
அதிரடி ஆக்ஷன், ரத்தம் தெறித்த படங்களையே எடுத்த அருண் மாதேஸ்வரன் அதற்கு நேர்மாறான ஒரு படத்தை எடுப்படி எடுக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
பாரதிராஜா முதல் வெற்றிமாறன் வரை அவருடன் நெருங்கிப் பயணித்த ஒரு சில இயக்குனர்கள் இயக்கினால் இன்னும் சிறப்பாக வரலாமே என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் சிலர்.
ஆனாலும், 'இளையராஜா' என்ற பயோபிக் படம் இன்றைய தலைமுறை ரசிகர்களும் இளையராஜாவைப் பற்றி தெரிந்தும், அறிந்தும் கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். அவரது சம காலத்து அல்லது அடுத்த காலத்து இயக்குனர்கள் இயக்கினால் அது இன்றைய தலைமுறையினரை சரியாகச் சென்றடையுமா என்ற சந்தேகத்தையும் கேட்டுள்ளார்கள் சிலர்.
தன்னுடைய பயோபிக் பற்றிய படத்தை இயக்கத் தகுதியானவர், நடிக்கத் தகுதியானவர் யார் என்பதை ஆராய்ந்த பின்னரே அதற்கு இளையராஜா சம்மதம் தெரிவித்திருப்பார். அருண் மாதேஸ்வரன், தனுஷ் ஆகியோர் மீது இளையராஜாவிற்கு தன் பயோபிக் உருவாக்கம் பற்றிய நம்பிக்கை அழுத்தமாய் இருந்திருக்கும். எனவே தான் இந்தக் கூட்டணி தன்னைப் பற்றிய படத்தை தரமாக எடுக்கும் என அவர்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமாகவும் இருப்பார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் மீதான நம்பிக்கை இளையராஜாவுக்கு வந்ததைப் போல அவரது ரசிகர்களுக்கும் வரும் விதத்தில் அருண், தனுஷ் கூட்டணி நிச்சயம் கொடுக்கும் என அவரது நெருங்கிய வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
533 days ago
533 days ago