உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார்

காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார்


டிவி மற்றும் சினிமாவில் காமெடி வேடங்களில் நடிப்பவர் ஆர்த்தி. இவர் சக காமெடி நடிகர் கணேஷ்கரை திருமணம் செய்துள்ளார். ஆர்த்தியின் தந்தை ரவீந்திரன் சென்னையில் காலமானார். சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரின் தனி செயலாளராக பணியாற்றியவர் ரவீந்திரன். இவருக்கு 2 மகள்கள். ஒருவர் சீனாவில் இருக்கிறார். இன்னொருவர் ஆர்த்தி.

பணி ஓய்வுக்குபின் கோவையில் வசித்து வந்து இருக்கிறார் ரவீந்திரன். இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ட்ரோக் வர, ரவீந்திரனை சென்னை தனியார் மருத்துமனையில் அட்மிட் செய்து, கவனித்து இருக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார். 'அப்பா ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பணியாற்றியதால், இரு மகள்களையும் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக்க நினைத்தார். அவர் ஆசை மட்டும் நிறைவேறவில்லை. ஆனாலும், அவரை நாங்கள் நன்கு கவனித்துக்கொண்டோம்' என ஆர்த்தி கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !