உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம்

நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம்


விக்ரம் மகன் துருவ் நடித்த 'பைசன்' தீபாவளிக்கு வருகிறது. இந்த படம் குறித்து இதுவரை துருவ் தந்தையும், பிரபல ஹீரோவுமான விக்ரம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. படம் தொடங்கிய நாள் முதல் சோஷியல் மீடியாவில், சினிமா மேடைகளில், நிகழ்ச்சிகளில் பைசனை புகழவில்லை. ஏன், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், பாடல், டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.

துருவ் நடித்த 'வர்மா, மகான்' படங்களில் விக்ரமின் பங்களிப்பு இருந்தது. வர்மா முதல் படம் என்பதால் மகனை அறிமுகப்படுத்த உதவினார். மகானில் அவரும் நடித்ததால், புரமோஷனில் இருந்தார். ஆனால், பைசன் படத்தில் மகன் தனியாக ஜெயிக்க வேண்டும். தனித்து திறமையை காண்பிக்க வேண்டும் என்று விரும்புவதால் அவர் ஒதுங்கிவிட்டதாக தகவல். சென்னையில் நடந்த புரமோஷனில் அவர் கலந்துகொண்டு பேசினால், அவர் பேச்சுதான் பரபரப்பாகும். துருவ், படக்குழு பேச்சுகள் காணாமல் போகும். ஆகவே, அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

படம் வெற்றி பெற்றால் மகனை பாராட்டி, படக்குழுவை புகழ்ந்து பேச வாய்ப்பாம். ஆனால், படப்பிடிப்பு நடக்கும்போது துருவ் எப்படி என்று பசுபதி உள்ளிட்ட பலரிடம் போனில் ஆர்வமாக கேட்டு தெரிந்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !