உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுயசரிதை எழுதும் ரஜினி : மகள் தகவல்

சுயசரிதை எழுதும் ரஜினி : மகள் தகவல்

ரஜினியின் வரலாற்றை பலர் தனித்தனி புத்தகங்களாக எழுதியுள்ளனர். இது போன்ற புத்தகங்களை அவரவர் தங்கள் பார்வையில் எழுதியுள்ளனர் என்றும், அவற்றில் சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மை இல்லை என்றும் ரஜினி பல நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் தன் சுயசரிதயை எழுத பலமுறை முயன்றார். குறிப்பாக எழுத்தாளர் ராமகிருஷ்ணனை வைத்து தனது சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அதனைப் பாதியில் நிறுத்திவிட்ட ரஜினி பல உண்மைகளை சொல்ல வேண்டிய வரும், அது பலர் மனதை பாதிக்கும் என்பதால் சுயசரிதையை தொடர விரும்பவில்லை, என்று கூறிவிட்டார். இந்த நிலையில் ரஜினி, தன் சுயசரிதயை எழுதி வருவதாக அவரது மகள் சௌந்தர்யா கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறிருப்பதாவது: அப்பாவை எவ்வளவு கொண்டாடினாலும் போதாது. 'ஒரே சந்திரன், ஒரே சூரியன்' மாதிரி ஒரே சூப்பர் ஸ்டார்னா அப்பா மட்டும்தான். அப்பா சாதிச்சது மாதிரி, அவருடைய இடத்துக்கு வேற யாராலயும் வர முடியாது. இது நூறு சதவிகிதம் உண்மையும்கூட.

அவரோட 50 வருஷம் என்பது சாதாரணமான சாதனை இல்லை. அவருடைய மகளாக நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அப்பாவுக்குப் பெரிய விழா எடுத்துக் கொண்டாடணும்னு ஆசை. ஆனா, எங்கே இருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

50வது வருஷத்துக்கு 'படையப்பா'வை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு அப்பா நினைச்சிருந்தார். 25 வருஷமாகத் திரும்பவும் திரைக்கே வராத ஒரு படம்ங்கறதால அப்பா விரும்பினார். 50வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக ரீ-ரிலீஸ் செய்தோம். ஆனால், அதை ஒரு விழாவாக ஏன் கொண்டாடவில்லை என்றால் அதை எங்கே தொடங்குவது என்று எங்களுக்கு புரியவில்லை.

இன்னொரு விஷயம், அப்பா இப்போது அவரோட சுய சரிதை நூல் எழுதும் வேலைகளை ஆரம்பித்து விட்டார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக குளோபல் சென்சேஷன் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !