உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45

100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கூலி'. அப்படத்தில் இடம் பெற்ற 'மோனிகா' பாடல் உடனடி ஹிட் பாடலானது. அப்பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடினார்.

அதன் லிரிக் வீடியோ தான் முதலில் வெளிவந்தது. யூ டியூபில் மட்டும் அந்தப் பாடல் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதன்பின் சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாடலின் முழு வீடியோ வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் தற்போது யு டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அனிருத்தின் இசையில் வெளிவந்த சினிமா பாடல்களில் லிரிக் வீடியோ, முழு வீடியோ பாடல்களில் இந்தப் பாடலுடன் சேர்த்து இதுவரையில் 45 பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.

தமிழ் சினிமாவில் அதிக 100 மில்லியன் பார்வைகளைத் தன் வசம் வைத்துள்ள ஒரே இசையமைப்பாளர் அனிருத் மட்டும்தான். அவரது அதிகபட்ச பார்வைகளைக் கொண்ட பாடலாக 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக் குத்து' பாடல் 770 மில்லியன்களைக் கடந்துள்ளது.

தமிழ் சினிமா பாடல்களில் அதிக பார்வைகளுடன் யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த 'ரவுடி பேபி' பாடல் 1726 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய சினிமா பாடல்களில் இந்தப் பாடல்தான் இன்று வரையிலும் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !