உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மவுனப் படம் என்றாலும் 5 மொழி சான்றிதழ் பெற்றுள்ள 'காந்தி டாக்ஸ்'

மவுனப் படம் என்றாலும் 5 மொழி சான்றிதழ் பெற்றுள்ள 'காந்தி டாக்ஸ்'

இந்தியத் திரையுலகத்தில் பேசும் படங்கள் வந்த பிறகு பேசாத படங்களாக மவுனப் படங்கள் என்ற அடையாளத்துடன் ஒரு சில படங்களே வந்தன. தமிழில் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடித்த 'பேசும் படம்', பிரபுதேவா நடித்த 'மெர்க்குரி' ஆகிய இரண்டு படங்கள் இப்படி வெளிவந்தன. இன்று வெளியாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' படம் ஒரு மவுனப் படம்தான்.

பொதுவாக மவுனப் படம் என்றால் அதை எந்த மொழி கணக்கில் சேர்ப்பது என்ற ஒரு கேள்வி எழும். 'பேசும் படம்' படத்தின் கதைக்களம் பெங்களூருவாக இருந்தது. அது மட்டுமல்ல அந்தப் படம் வெளிவந்த 1987 ஆண்டிற்கான தேசிய விருதில் 'முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் சிறந்த பிரபல திரைப்படம்' என்ற விருதை வென்றது. அதில் 'பேசும் படம்' படத்தை கன்னடப் படம் என்று குறிப்பிட்டே விருது கொடுத்துள்ளார்கள். அதனால், 'மவுனப் படம்' என்றாலும் அது தமிழ்ப் படங்களின் கணக்கில் இடம் பெறாது.



அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடித்து இன்று வெளியாகி உள்ள 'காந்தி டாக்ஸ்' படமும் மவுனப் படம் என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனால், இந்தப் படத்தை எந்த மொழிப் படம் என்ற கணக்கில் சேர்ப்பது என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், இப்படத்திற்கு 'ஹிந்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு, மலையாளம்' ஆகிய மொழிகளில் 'மல்டிலிங்குவல்' என்றும், 'சைலண்ட் மியூசிக்கல்' என்றும் சான்றிதழைப் பெற்றுள்ளார்கள். அதனால், இந்த மொழிப் படங்களாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !