ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலை : த்ரிஷா நெகிழ்ச்சி
ADDED : 572 days ago
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த த்ரிஷா, ஒருநாள் காலைப்பொழுதில் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலைப்பொழுது” என்று கூறியுள்ளார்.