வேட்டையன் டீசர் எப்போது வருகிறது தெரியுமா ?
ADDED : 561 days ago
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், கடப்பா ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியீட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.