‛8 தோட்டாக்கள்' பட இயக்குனர் உடன் இணைந்த சித்தார்த்
ADDED : 608 days ago
நடிகர் சித்தார்த் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சித்தா' திரைப்படம் அவரை மீண்டும் வெற்றி பாதையை நோக்கி திருப்பி உள்ளது. தற்போது கமல் உடன் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தாண்டிற்குள் இந்தப்படம் நிச்சயம் வெளியாகிவிடும். சித்தா வெற்றிக்கு பின் தான் புதிதாக தேர்வு செய்யும் கதைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ‛8 தோட்டாக்கள்' பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.