சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா?
ADDED : 608 days ago
நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது ஒரு பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதையாம். நயன்தாராவுக்கும் கதையில் திருப்தி ஏற்படவே இப்போது அடுத்தகட்ட வேலைகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.