திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி
ADDED : 559 days ago
காமெடி நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவரது மகள் தேஜஸ்வினி - பரத் திருமணம் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. நடிகர் விவேக் உயிருடன் இருந்தபோது ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வந்தார். அதேபோல் தனது மகளின் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை, பூச்செடிகளை பரிசாக வழங்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று தனது திருமணத்தையொட்டி தந்தையின் கனவை நனவாக்கும் வகையில், தன்னை வாழ்த்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகளை பரிசாக வழங்கியிருக்கிறார் விவேக்கின் மகள் தேஜஸ்வினி.