சபரிமலை ஐயப்பன் பின்னணியில் உருவாகி உள்ள ‛ரூபன்'
ADDED : 633 days ago
ஏ.கே.ஆர்., பியூச்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‛ரூபன்'. இப்படத்தை கே. ஆறுமுகம், இளங் கார்த்திகேயன், எம் ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். நாயகனாக விஜய் பிரசாத்தும், நாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சார்லி, விஜய் டிவி புகழ் ராமர், கஞ்சா கருப்பு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். ஐயப்பன் இயக்கி உள்ளார்.
‛‛காந்தாரா, ஹனுமன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் சபரிமலை ஐயப்பனை மையமாக வைத்து கமர்சியல் கலந்த ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 11ல் திரைக்கு வருகிறது'' என்கிறார் இயக்குனர் ஐயப்பன்.