பஞ்சதன் ஸ்டுடியோவை உருவாக்கிய எம்மி பால் மறைவு : ஏஆர் ரஹ்மான் இரங்கல்
ADDED : 632 days ago
இந்திய சினிமாவை தாண்டி ஆஸ்கர் வரை வென்று சாதித்தவர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏஆர் ரஹ்மானின் இசைக்கு பெரும் பங்காற்றியது அவரது பஞ்சதன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோவில் இருந்து அவரின் சினிமா பயணம் றெக்க கட்டி பறக்க ஆரம்பித்தது என்று சொல்லலாம். இந்த ஸ்டுடியோவை உருவாக்கியவர் எம்மி பால், 74. உடல்நலக்குறைவால் இவர் நேற்றுமுன்தினம் சென்னையில் காலமானார்.
எம்மி பால் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛பஞ்சதன் ஸ்டுடியோவில் தான் எனது பெரும்பாலான இசை உருவாக்கப்பட்டது. அந்த ஸ்டுடியோவின் நிஜ கட்டடக் கலைஞரான எம்மி பாலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.