ராமாயணம் ஹிந்தி படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : 599 days ago
பாலிவுட்டில் தயாராகும் ராமாயணம் என்ற படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதை வேடத்தில் சாய் பல்லவி, ராவணன் வேடத்தில் யஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக 11 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட செட் போட்டு நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் ராமரின் இளமைக்காலம், சீதையுடன் திருமணம், சீதையை இலங்கைக்கு ராவணன் கடத்தி சென்றது போன்ற ராமாயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இடம் பெறுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளன.