உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் புத்தாண்டில் ‛ராயன்' படத்தின் டீசர் வெளியீடு

தமிழ் புத்தாண்டில் ‛ராயன்' படத்தின் டீசர் வெளியீடு

ப.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ஐம்பதாவது படம் ராயன். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் ராயன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படத்தை ஜூன் மாதம் ஏழாம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !