மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
541 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
541 days ago
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். அது வெற்றி பெறவில்லை. பின்பு காங்கிரசில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆனார். பின்னர் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.
சிரஞ்சிவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர். அவர் 'ஜனசேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சீரஞ்சிவி தனது தம்பிகளான பவன் கல்யாண், நாகபாபுவை ஐதராபாத் வரும்படி அழைத்தார். ஐதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலில் 'விஸ்வம்பரா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீரஞ்சிவியை இருவரும் சந்தித்தனர். தம்பிகளுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி பின்னர் ஜனசேனா கட்சியின் தேர்தல் செலவுக்காக 5 கோடி ரூபாயை நன்கொடையாக சிரஞ்சீவி வழங்கினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்தார் பவன் கல்யாண்.
541 days ago
541 days ago