‛மிஸ்டர் பச்சான்' படத்தில் இணைந்த ஜெகபதி பாபு!
ADDED : 556 days ago
கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக், 'மிஸ்டர் பச்சான்' என்கிற பெயரில் ரவி தேஜா, பாக்யாஸ்ரீ நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதி பாபு இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.