சுதா கொங்கரா உதவி இயக்குநர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்
ADDED : 684 days ago
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‛லவ்டுடே' படம் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் என்பவர் இயக்குகிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறதாம்.