உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் படம்

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் படம்

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் பிரபாஸ். அதன்பின் அவர் நடிப்பில் உருவான படங்கள் பான் இந்தியாவாக வெளிவந்தன. இருப்பினும் பாகுபலி அளவுக்கு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. கடைசியாக வந்த சலார் ஓரளவுக்கு வசூலை தந்தன. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.

இதையடுத்து அர்ஜூன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, பிரபாஸை வைத்து நான் இயக்கவுள்ள படத்தின் பெயர் 'ஸ்பிரிட்'. இதில் பிரபாஸ் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் பட்ஜெட் மட்டும் ரூ.300 கோடி செலவில் உருவாகிறது. இந்த பட்ஜெட்டை வெறும் சாட்லைட், டிஜிட்டல் உரிமத்தின் மூலமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். படத்தின் முதல்நாள் வசூலே ரூ.150 கோடி இருக்கும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !