தெலுங்கு பட வாய்ப்பை மிஸ் செய்த ஜி.வி.பிரகாஷ்
ADDED : 544 days ago
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பயணித்து வருகிறார். தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது 'டியர்' என்கிற படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். ஏப்., 11ம் தேதியான நாளை படம் வெளியாகிறது.
இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தெலுங்கு படங்களில் எப்போது நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, தசரா படத்தில் நானியின் நண்பராக வரும் சூரி என்கிற கதாபாத்திரத்திற்கு முதலில் என்னிடம் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். கால்ஷீட் பிரச்சினையால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. வேறு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க காத்திருக்கிறேன்'' என்றார்.