உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டார் படம் எப்போது ரிலீஸ் : வெளியான தகவல்

ஸ்டார் படம் எப்போது ரிலீஸ் : வெளியான தகவல்

டாடா படத்தின் வெற்றிக்கு பின் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்' . அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கைலாசம் கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தை தேர்தலுக்கு பிறகு வருகின்ற மே 3ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !