உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஓ மை கடவுளே' பட இயக்குனர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

‛ஓ மை கடவுளே' பட இயக்குனர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

கடந்த 2020ல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இதன் வெற்றிக்குப் பிறகு அஸ்வந்த் மாரிமுத்துவின் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 26வது படமாக தயாரிக்கின்றனர். லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் கல்பாத்தி நிறுவனமும், பிரதீப் ரங்கநாதனும் இணையும் படம் இதுவாகும். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைக்கிறார்.

புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை ததும்பும் இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது.

அறிமுக வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=FPYbCVcPxW8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !