அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ரம்யா பாண்டியன்
ADDED : 546 days ago
பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சில படங்களிலும் நடித்தபோதும் சோசியல் மீடியாவில்தான் இவர் ஆக்ட்டிவாக இருக்கிறார். தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு தான் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன். தங்க கோயில் முன்பு தான் மட்டுமின்றி தனது குடும்பத்தாருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலானது.