ஜூனில் திரைக்கு வரும் ஸ்ரேயா ரெட்டியின் அண்டாவக் காணோம்
ADDED : 540 days ago
விஷால் நடித்த திமிரு மற்றும் காஞ்சிவரம், பள்ளிக்கூடம் என பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அண்டாவக் காணோம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில பிரச்னைகளால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரிலீஸ் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அண்டாவக் காணோம் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துக் கொள்கிறார். இப்படம் குறித்த ஒரு புகைப்படத்துடன் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.