மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
537 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
537 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என ஒரு அப்டேட் கொடுத்தார்கள்.
அடுத்த அப்டேட்டாக நாளை(ஏப்., 14) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, “நாளை சம்பவம் உறுதி,” என்று முதலில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் முதல் சிங்கிள் வெளியீடு பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ஆனால், போஸ்டரில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இடம் பெறாமல் இருந்தது. அடுத்த அப்டேட் ஆக மாலை 6 மணியளவில் நாளை(ஏப்., 14) மாலை 6 மணியளவில் முதல்பாடல் வெளியாகும் என சிறு புரொமோ வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார்.
537 days ago
537 days ago