சமந்தா பாணியில் கவர்ச்சியை வெளிப்படுத்திய ராஷி கண்ணா
ADDED : 642 days ago
ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா 2018ம் ஆண்டில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்தார். அதன்பின் அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டுமே அணிந்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஷி கண்ணாவும் அதே பாணியில் உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சமந்தாவின் அந்த புகைப்படத்தை போலவே ராஷி கண்ணாவின் புகைப்படமும் வைரலானது.