கமலின் தக்லைப் படத்திலிருந்து சித்தார்த்தும் வெளியேறினார்
ADDED : 585 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தக் லைப். திரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் தங்களது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாக சொல்லி தக்லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது சித்தார்த்தும் தக்லைப் படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் சித்தார்த் நடிக்க இருந்த கேரக்டருக்கும் வேறு நடிகரை பரிசீலணை செய்து வருகிறாராம் மணிரத்னம்.