உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாயாஜி ஷிண்டேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சாயாஜி ஷிண்டேவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான பாரதி என்ற படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. அதன் பிறகு பாபா, பூவெல்லாம் உன் வாசம், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் பரவலாக நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாயாஜி ஷிண்டேவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. தற்போது உடல்நிலை சீராகவும், நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !