உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரோட்டர்டாம் பட விழாவை போல் மற்றொரு விழாவிற்கு சென்ற ‛ஏழு கடல் ஏழு மலை'

ரோட்டர்டாம் பட விழாவை போல் மற்றொரு விழாவிற்கு சென்ற ‛ஏழு கடல் ஏழு மலை'


ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஏழு கடல் ஏழு மலை'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்தில் இப்படத்தை 53வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. தொடர்ந்து இப்போது மற்றொரு திரைப்பட விழாவான மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகி உள்ளதாக படக்குழு பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !