எழுத்தாளரான இயக்குனர்
ADDED : 538 days ago
எழுத்தாளர்கள் இயக்குனராவது அதிகரித்துள்ளது. ராசி அழகப்பன், அஜயன் பாலா, பாஸ்கர் சக்தி போன்று தற்போது சினிமாவுக்கு வந்துள்ள எழுத்தாளர் ராஜ்தேவ். ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கிஸ் டெத், ஏ ஸ்டேன்ஜர் இஸ் வாக்கிங் பை என இரண்டு திரைக்கதைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது அவர் இயக்கும் படம் 'சத்தம் இன்றி முத்தம் தா'.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த், விக்னேஷ், பிரியங்கா திம்மேஷ் சந்தியா, ஹரிஷ் பேராடி, இன்ஸ்பெக்டர் எட்வர்ட், வியான், ரகு, நிஹாரிகா, ஷீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜுபின் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் திரில்லராக படம் உருவாகி வருகிறது. படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.