ரீ-ரிலீஸ் ஆகும் ராவணன்
ADDED : 650 days ago
கடந்த 2010ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ராவணன்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இன்றளவிலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக ராவணன் உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராவணன் படத்தை நாளை ஏப்ரல் 17ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற சில ஊர்களில் உள்ள திரையரங்குகளை தேர்ந்தெடுத்து ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.