ரஜினி மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்
ADDED : 541 days ago
ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் புரமோ வீடியோ படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த வாரத்தில் அந்த வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ரஜினி இந்த படத்தில் நெகடிவ் கலந்த வேடத்தில் தாதாவாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் திரிஷா, ஷோபனா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தில் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக கூறப்படுகிறது.