பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்
ADDED : 538 days ago
தமிழ்நாட்டில் விஸ்நாதன் - ராமமூர்த்தி ஜோடிகள் இசையில் கொடிகட்டி பறந்த காலத்தில் கேரளாவில கொடி கட்டி பறந்த இசை ஜோடி விஜயன் - கே.ஜி.ஜெயன். ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களுக்கு, இசை அமைத்தும், பாடியும் உள்ளனர். கர்நாடக இசையிலும் இருவரும் சாதனைகள் பல படைத்தனர். இந்த ஜோடிகளில் விஜயன் 1986ம் ஆண்டே மரணம் அடைந்து விட்டார். அவரது மறைவிற்கு பிறகு அவரது பெயரையும் இணைந்து ஜெய விஜயன் என்கிற பெயரில் இசை அமைத்து வந்தார் கே.ஜி.ஜெயன்.
89 வயதான கே.ஜி.ஜெயன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மனோஜ் கே.ஜெயனின் தந்தை தான் ஜெயன் என்பது குறிப்பிடத்தக்கது.