உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...!

இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. உலக அரங்கில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான தேர்தல், 6 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 19) நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேக்கட்டமாக இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற காலை முதலே ஆர்வம் காட்டினர். திரைப்பிரபலங்களும் காலை முதலே ஓட்டளித்தனர். அதன் விபரம் கீழே போட்டோவுடன்...

* நடிகர் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு காலையில் முதல் ஆளாக வந்து ஓட்டளித்தார்.



* நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி உடன் வந்து சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகர் விஜய் சேதுபதி சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* சென்னை, தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் இயக்குனர் பாரதிராஜா அவரது மகனும், நடிகருமான மனோஜ் ஆகியோர் ஓட்டளித்தனர்.



* நடிகரும், அமைச்சருமான உதயநிதி தனது மனைவியும் இயக்குனருமான கிருத்திக்கா உதயநிதி உடன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். இதேப்போல் ஐஸ்வர்யா ரஜினியும் இந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகை குஷ்பு தனது கணவர், இயக்குனர் சுந்தர் சி மற்றும் இரு மகள்கள் உடன் சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.



* நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை, நீலாங்கரை உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று ஓட்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்திய விஜய் இந்தமுறை காரில் சென்று ஓட்டு போட்டார்.



* நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் குடும்பத்தினர் சென்னை, தி.நகரில் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.



ஓட்டளித்த மற்ற திரைப்பிரபலங்கள்...



சசிகுமார்



அதிதிபாலன்



சரத்குமார் - ராதிகா மற்றும் வரலட்சுமி



கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக்



இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் காளி வெங்கட்



பிரசன்னா - சினேகா தம்பதியர்



த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்



இசையமைப்பாளர் இளையராஜா



இயக்குனர் ஹரி - நடிகை ப்ரீத்தா தம்பதியர்



யோகிபாபு மற்றும் உறியடி விஜயகுமார்



இயக்குனர்கள் லிங்குசாமி மற்றும் செல்வராகவன்



தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண்



நடிகர்கள் விக்ரம், ராகவா லாரன்ஸ்



நடிகை கவுதமி மற்றும் நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி



இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் வையாபுரி



நடிகர்கள் விஷால் மற்றும் சவுந்திர ராஜா



நடிகர் சஞ்சய் பாரதி மற்றும் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்



நடிகர் நகுல் அவரது மனைவி மற்றும் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் குடும்பத்தினர்.



நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஆண்ட்ரியா



நடிகர்கள் ஆர்யா மற்றும் சிபிராஜ்



இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தர்



இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்



நடிகர்கள் அரவிந்த்சாமி, விமல்



இயக்குனர் கவுரவ் நாராயணன், தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்



நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி



இசையமைப்பாளர்களும், நடிகர்களுமான விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ்.



நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி உடன் சென்னையில் ஓட்டளித்தார். அருகில் உள்ள படம் கோவையில் ஓட்டளித்த நடிகை அதுல்யா ரவி.



நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் இயக்குனரும், நடிகரும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் ஓட்டளித்தனர்.



நடிகர்கள் வடிவேலு, பிசாந்த் ஓட்டளித்தனர்.



இயக்குனர் ஷங்கர் தனது மனைவி, மகள் அதிதி மற்றும் மகனுடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஓட்டளித்தார்.



நடிகர் அருண் பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஓட்டளித்தனர்.



நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் சென்னையில் ஓட்டளித்தனர்.



இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஓட்டளித்தனர்.



நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் கணேஷ் வெங்கட்ராம்.



நடிகர்கள் ராமராஜன் மற்றும் கிருஷ்ணா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !