சூர்யா 44வது படத்தில் இணைந்த பிரபலங்கள்!
ADDED : 863 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ‛24, பேட்ட' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த திரு என்பவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், முதல் முறையாக இப்படத்தின் மூலம் சூர்யாவிற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார் என உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 17ம் தேதி துவங்குகிறது.