கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்!
ADDED : 586 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இதற்காக தற்போது குதிரை ஏற்றம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சூர்யாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அவரது மகன் தேவ், கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, தனது மகனை வாழ்த்தியது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பிளாக் பெல்ட் வாங்கிய அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி இருக்கிறார். அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.