'கோட்' படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது! -வெங்கட் பிரபு தகவல்
ADDED : 539 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் இதுவரை இங்கு படமாக்கப்படாத பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் எங்களுடைய ஆடியன்சுக்கு இந்த படத்தின் மூலம் மாஸ்கோவை புதிய கோணத்தில் காண்பிக்கப் போறோம்'' என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.