ஏப்ரல் 26ல் 4 படங்கள் ரிலீஸ்
ADDED : 535 days ago
2024ம் ஆண்டு ஆரம்பமானதும் தெரியவில்லை, நான்காவது மாதம் கடந்து போவதும் தெரியவில்லை. விர்ர்ர்ரென போய்க் கொண்டே இருக்கிறது. வாராவாரம் நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 26ம் தேதியன்றும் நான்கு படங்கள் வெளிவர உள்ளது.
ஹரி இயக்கத்தில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ரத்னம்', மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ஒரு நொடி', எஸ்.சசிகுமார் இயக்கத்தில் பைன் ஜான், ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் நடிக்கும் 'இங்கு மிருகங்கள் வாழும் இடம்', பிரபு இயக்கத்தில் யுவன் பிரபாகரன், சமந்து நடிக்கும் 'கொலை தூரம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.