'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம்
ADDED : 535 days ago
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கும் அவரது 360வது படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்., 22) ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் 'தளபதி' நடிகை ஷோபனா. இருவரும் இணையும் 56வது படம் இது.
'எல்360' என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது குறித்து மோகன்லால், “ரெஜபுத்ரா விஷுவல் மீடியா சார்பில் ரெஞ்சித் தயாரிப்பில், தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பின் பிரார்த்தனையில் உள்ளேன். எனது 360வது படத்தின் முயற்சியைத் தொடங்கும் போது எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்கள் ஆசியை வேண்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.