சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா
பாலிவுட் சினிமாவில் கடந்த 2011ல் இருந்து நடித்து வருபவர் பரிணிதி சோப்ரா. என்றாலும் அவரது திறமைகேற்ற வேடங்கள் கிடைத்து இன்னும் அவர் முன்னணி நடிகையாக வளரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், சினிமாவில் முன்னேற திறமை இருந்தால் மட்டும் போதாது. சில விசயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். நாம் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நான் வாய்ப்புகளுக்காக எந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடத்திலும் நெருங்கி பழகுவதில்லை. அதனால்தான் எனக்கு வெயிட்டான வேடங்கள் கிடைப்பதில்லை. எனது திறமையை மதித்து வாய்ப்பு தருபவர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் பரிணிதி சோப்ரா. இப்படி அவர் தனது நிலைபாட்டை வெளிப்படையாக கூறியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.