நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்
ADDED : 532 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து நிறைய விளம்பரங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான இந்த கிரிக்கெட் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2023ல் மகாதேவ் என்ற செயலியில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக தமன்னா மீது புகார் எழுந்தது. இதனால் இந்த போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற நிறுவனம் இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்படி அந்நிறுவனம் அளித்த புகாரில் மும்பை சைபர் கிரைம் போலீசார் ஏப்., 29ல் தமன்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.