'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர்
ADDED : 544 days ago
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் 'அமரன்'. பத்து வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் 25ம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய படம்தான் இந்த 'அமரன்'.
இன்று அவருடைய் நினைவு நாளை முன்னிட்டு 'அமரன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் துணிச்சலான இரண்டு ஹீரோக்கள் மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் ஆகியோர் தங்கள் உயர்ந்த தியாகத்தைச் செய்தனர். இந்த அழியாத ஆன்மாக்களுக்கு எமது அஞ்சலியையும், மரியாதையையும் செலுத்துகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.