மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல்
ADDED : 579 days ago
தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் தனியார் டிவி, வரும் நாட்களில் பல புதிய தொடர்களை ஒளிபரப்ப உள்ளது. மல்லி, ஆடுகளம், வாரணம் ஆயிரம் என அடுத்தடுத்து பல சீரியல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஆடுகளம் தொடரில் டெல்னா டேவிஸ் மற்றும் சல்மானுள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மூத்த நடிகர்களான டெல்லி கணேஷ், சச்சு ஆகியோர் இணைந்துள்ளனர்.