வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம்
ADDED : 528 days ago
சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக 'வீர தீர சூரன்' 2ம் பாகத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த டீசரில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றினார். இது அல்லாமல் இப்படத்திற்காக விக்ரம் இன்னும் இரண்டு தோற்றத்தில் தோன்றவுள்ளார். மொத்தமாக இந்த படத்தில் விக்ரம் மூன்று தோற்றத்தில் நடிக்கின்றார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.