புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்
ADDED : 528 days ago
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதி ஒன்றை நடத்துவதோடு, அவர்களை விளையாட்டு மற்றும் கலைத்துறையில் வளர்த்து வருகிறார். தனது தாயாருக்கும், ராகவேந்திரருக்கும் கோவில் கட்டி உள்ளார்.
இந்த நிலையில் 'மாற்றம்' என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்க உள்ளார். இது வருகிற மே 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அமைப்பை ராகவா லாரன்ஸால் உதவி பெற்று படித்து முன்னேறி இப்போது நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து இதனை நடத்த இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “உதவியால் வென்றவர்கள் மற்றவர்களுக்கு உதவ வருகிறார்கள்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.