உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி'

ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி'

தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'. இப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 19ம் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த 9 நாட்களில் மட்டும் இப்படம் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரீ-ரிலீஸ் படங்களில் இதுவரையில் இந்தியாவில் 'டைட்டானிக்' படம் 18 கோடி வசூலித்ததுதான சாதனையாக உள்ளது. அந்த சாதனையை 'கில்லி' முறியடித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் கடந்த இரண்டு வாரங்களில் தமிழில் வெளியான புதிய படங்களைக் காட்டிலும் 'கில்லி' படத்திற்கான வசூலும், ரசிகர்களின் வருகையும் அதிகமாக இருக்கிறதாம்.

ஏப்ரல் மாதம் வெளியான புதிய படங்களின் வசூலை ரீ-ரிலீஸ் படங்கள் தான் கெடுத்துவிட்டது என அந்த புதிய படங்களின் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் புலம்பும் அளவிற்கு அமைந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !