மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால்
ADDED : 526 days ago
நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ரத்னம்'. வழக்கமான டெம்பிளேட்டில் வெளியானதால் இந்த திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து 'துப்பறிவாளன் 2'ம் பாகத்தினை விஷால் இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது.
துப்பறிவாளன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற பிறகு முத்தையா இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் இந்தப்படம் தயாராகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.