இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம்
ADDED : 538 days ago
இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் உடல்நல பிரச்னையால் சென்னையில் காலமானார். தஞ்சையை சேர்ந்த பிரவீண் ஒரு கீபோர்டு கலைஞர். தமிழ் சினிமாவில் இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார். சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த பிரவீண் குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6:30 மணியளவில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 6 மணியளவில் நடக்கிறது. இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமாரின் மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.